Monday 6 December 2021

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3 ஆம் வார சோமாவாரத்தை முன்னிட்டு 4-ஆம் ஆண்டு சங்காபிசேகம் நடைபெற்று அருள்மிகு சொக்கநாதருக்கும் மீனாட்சிஅம்மனுக்கும் அபிசேக அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூசை நடைபெற்றது. திரளான மக்கள் கலந்து கொண்டனர். பிறகு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கு வந்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம்


இங்கனம், 

புங்கம்பாடி அரண்மனையார்

முத்து ராமையா வள்ளல்

போன்: 9994483763





Saturday 27 November 2021

4 ஆம் ஆண்டு சோமாவார சங்காபிசேக விழா 2021

தென்னாடுடைய சிவனே போற்றி.!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!
இறையன்புடையீர் வணக்கம்,
நமது புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் கார்த்திகை மாதம் 06.12.2021 திங்கள்கிழமை அன்று 4 ஆம் ஆண்டு சோமாவார சங்காபிசேக விழா நடைபெற இருப்பதால் அனைத்து ஆன்மீக அன்பர்களும் கலந்துகொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
இங்கனம்,
புங்கம்பாடி அரண்மனையார்
முத்து ராமையா வள்ளல்
போன்: 9994483763



Tuesday 17 November 2020

சங்காபிசேகம் 2020

 இறையன்புடையீர் வணக்கம்,

நமது புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதர் கோவிலில் கார்த்திகை 15 ஆம் நாள் (30.11.2020) திங்கட்கிழமை அன்று அம்மையப்பனுக்கு 108 வலம்புரி சங்காபிசேகம் நடைபெறவிருக்கிறது. ஆன்மீக அன்பர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். இறையருள் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !



Friday 28 June 2019

சொக்கநாதர்‌ பதிகம்‌

சொக்கநாதர்‌ பதிகம்‌

ஓம்‌ நமசிவாய ஓம்‌ ஓம்‌ நமசிவாய!

கல்லில்செய்த யானைக்குக் கரும்பு தன்னையளித்தவா
கரும்புவில்லை எடுத்தவனை கண்காளால் எறித்தவா
அல்லல்படும்‌ அன்பர்வாழ்வில் ஆனந்தமே அருளவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய் சொக்கேசனே

நரிகளெல்லாம்‌ பரிகளாக நாடகம்‌ பரிந்தவா
நாரையதும்‌ முக்திகாண நலம்பரிந்த நாயகா
அரியும்‌௮றியாத்‌ திருவடியை அடியவர்க்கு காட்டவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

வந்திதந்த பிட்டுக்கே‌ வருந்திமண்ணை சுமந்தவா
வாதவூரர்‌ பாடல்கேட்டு முதுகில் புண்ணைக் கொண்டவா
எந்தநாளும் உன்னையென்னும் ஏழைக்கருள் செய்யவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

தமிழும் வாழ்வேண்டியே தலையில்விறகு சுமந்தவா
தலையில்கங்கை மதியும்சூடி. கயிலைமலை அமர்ந்தவா
அமிழதம்‌அந்த அமரர்கொள்ள ஆலகாலம்‌ உண்டவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்க்‌ சொக்கேசனே

அக்னியில்‌ இட்ட ஏடும்‌ அழிந்திடாமல்‌ காத்தவா
அலைகளாடும்‌ வைகையிலும்‌ அவற்றைக்கரை சேர்த்தவா
முக்திதரும் முதல்வனென மதுரநகர் அமர்ந்தவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

ஆயுதங்கள் ஏதுமின்றி புறங்கள்மூன்றும்‌ எறித்‌தவா
ஆணவமேகொண்ட பிரம்மன் தலையிலொன்று பரித்தவா
காயுமான மனங்களையும்‌ கனியுமென மாற்றவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

பார்தனோடு போட்டியிட்டு பன்றிவேட்டை அடினாய்
பாண்டியனின்‌ சொல்லைக்கேட்டுக்‌ காலகள்மாறி ஆடினாய்‌
ஆர்தெழுந்த அலைகள்போல அன்புகாட்ட ஓடிவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்க சொக்கேசனே

வன்னிமரம்‌ கிணறுகூட வந்துசாட்சி கூறினாய்‌
வஞ்சியர்கள்‌ சாபம்தீர வளையல்தன்னைச்‌ துட்டினாய்‌
கன்னியர்கள் மாலை சூட கருணையோடு இங்கு வா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாயக்‌ சொக்கேசனே

ஓம்‌ நமசிவாய ஓம்‌ ஓம்‌ நமசிவாய!

Wednesday 22 May 2019

பால் குடம் எடுத்தல் விழா நிகழ்வு 2019

18.05. 2019 வைகாசி விசாகத்தன்று புங்கம்பாடி கரிய காளியம்மன் கோவிலிலிருந்து பக்தர்களால் பால்குடம் எடுத்துவரப்பட்டு அருள்மிகு மீனாட்சிஅம்மன் சமேத சொக்கநாதருக்கு பாலபிசேகம் செய்யப்பட்டு பச்சரிசி மாவு, தேன், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், புதிதாக வாங்கப்பட்ட திருவாச்சி மற்றும் நாகாபரணம் அணிவித்து அலங்காரம் செய்து தீபாராதனை சிறப்பு பூசை நடைபெற்றது.
பிறகு அன்னதானம் நடைபெற்றது
புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்துராமையா வள்ளல் மற்றும் அருள்ஜோதி வள்ளல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்தேனி மாவட்டம் பெரியகுளம் சஞ்சீவி சித்தர் ஸ்ரீ சிவகுரு அன்புசெல்வமகரிஷி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுஇவ்விழாவை சிறப்படைய செய்தார்கள், ஐயா அவர்களுக்கு நன்றி.
மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருளாசி பெற்றனர்.
கடும் இக்கட்டான சூழ்நிலையிலும்
இவ்விழாவிற்க்கு துணை நின்ற மணிகண்டன், கோவில் அர்ச்சகர்கள், விஜய், ஜெய் ஆகியோருக்கு எல்லாம் வல்ல இறைவனின் அருளாசி கிடைக்க வேண்டுகிறோம்.
மற்றும் இவ்விழாவிற்க்கு வந்த அனைவருக்கும் நன்றி




























Thursday 9 May 2019

பால் குடம் எடுத்தல் விழா 2019


ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பச்சரிசி மாவு அபிசேகம் இங்கு மிக சிறப்பு. திருமணம், புத்திர பாக்கியம், தொழில் வளர்ச்சிக்கு சிறந்த பரிகார தலமாகும்.

வருகின்ற வைகாசி 4 ஆம் தேதி (18.05.2019) விசாகத்தன்று பக்தர்களால் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அருள்மிகு மீனாட்சி அம்மன் சொக்கநாதருக்கு பாலபிசேகம் செய்யப்படுகிறது

நிகழ்ச்சி நிரல்

16.05.2018 காலை 7.30 மணிக்கு காப்பு கட்டுதல்

16.05.2018 காலை 8 மணிக்கு சிறப்பு ஆராதனை பூசை

16.05.2018 மாலை 4.30 மணிக்கு பிரதோச பூசை

17.05.2018 காலை 5 மணிக்கு கோ பூசை

17.05.2018 காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்

17.05.2018 மாலை 6 மணிக்கு அபிசேகம் அலங்காரம்

17.05.2018 மாலை 7.30 மணிக்கு பஜனை

18.05.2018 காலை 5.30 கரிய காளியம்மன் கோவிலிலிருந்து பால் குடம் புறப்படுதல்

18.05.2018 காலை 7.30 பாலபிசேகம்

18.05.2018 காலை 9.00 லட்சார்சனை

18.05. 2019 காலை 10.00 அன்னதானம் நடைபெறுகிறது

ஆகவே ஆன்மீக அன்பர்கள் எங்கள்
முயற்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள்
என்று நம்புகிறோம். அனைவரின்
உதவியோடு விழா சிறப்பாக நடக்க
விரும்புகிறோம். அனைவரும் வருகை தந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதர் அருள் பெற்று செல்ல வெண்டுகிறோம். இவ்விழாவிற்கு நிதியுதவியோ பொறுளுதவியோ கொடுத்து உதவுங்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
அரண்மனையார் முத்து ராமையா வள்ளல்
புங்கம்பாடி கிராமம்,
அரவக்குறிச்சி வட்டம்
கரூர் மாவட்டம்,.

Cell: 9994483763

mail : pungampadit@gmail.com

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...