Saturday 7 April 2018

அன்புடையீர் வணக்கம்,
நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது  என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.
1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை. 
தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது. 
ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்.

ஆலயத்தின் அமைப்பு.:

இறைவன்:சொக்கநாதர் 
இறைவி: மீனாட்சி அம்மன் 
பிறசன்னதிகள்: தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர் 
தலமரம்: வில்வம் 
கன்னிமூலை கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளில் உற்சவர் இல்லை.
கோவிலின் மேற்குப்பகுதி சுவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தால் இடிந்துவிட்டது. 

தற்பொழுது திருப்பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.






















 
அனைவருக்கும் வணக்கம் ,

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் முதற்கட்ட ஆய்வின்படி  2000 வருடம் பழமையான ஊர். அக்காலத்தில் இது ஒரு பெரிய தொழில் நகரமாக இருந்துள்ளது.கொங்கு நாட்டின் தலையூர் நாட்டிற்குட்பட்ட  முக்கிய நகரமாக விளங்கியது. முழு  ஆய்வுகளுக்குப்பிறகே முழுமையான வரலாறு கிடைக்கும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் மற்றும் காரியகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. கொங்கு நாட்டு மன்னர்களில் ஒருவரான தலையூர் காளி அவர்களின் அரச பரம்பரையில் வந்த புங்கம்பாடி அரண்மனையார் திரு. முத்து ராமையா வள்ளல்  அவர்கள் பரம்பரை அறங்காவலாராக இருந்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வலைதளம் புங்கம்பாடி பற்றி தகவல்களை வரும்காலங்களில் பதியப்படும்.

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...