Friday 5 October 2018

கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வு

புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வு  நடைபெற்றது . அருகில் உள்ள கரிய காளியம்மன் கோயில், கணக்குவேலன்பட்டி மொட்டையாண்டவர் கோயில், சின்ன அய்யம்பட்டி பெருமாள் கோயில் , புங்கம்பாடி குடகனாற்றின் மேல் கரையில் உள்ள நத்தக்காடு ஆகிய இடங்களிலும் ஆராய்ச்சி நடைபெற்றது. ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்.

கல்வெட்டில் உள்ள பல எழுத்துக்கள் சேதமடைந்திருந்ததால்ஒரு வார்த்தைகள் மட்டுமே புரிந்துகொள்ளமுடிந்தது.

மடப்பள்ளி சுவர் கல்வெட்டு 
தடவை கோவில் காணியாளர் ஆண்டியப்பப்பிள்ளை குமாரர் குமாரசாமி பிள்ளை அவர்களால் மீனாட்சி சுந்தரேசுவரர் சந்நிதி கட்டிவைத்தத உபயம்

முக மண்டபம் சுவர் கல்வெட்டு 

கிபி 1702
சக வருடம் 1624
கலியுகம் 4803
சித்திரபானு ஆனி மாதம் 13 ஆம் தேதி
ரோகினி நட்சத்திரம்
திரயோதசி திதி
இப்படிப்பட்ட சுபதினத்தில்














No comments:

Post a Comment

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...