Friday 28 June 2019

சொக்கநாதர்‌ பதிகம்‌

சொக்கநாதர்‌ பதிகம்‌

ஓம்‌ நமசிவாய ஓம்‌ ஓம்‌ நமசிவாய!

கல்லில்செய்த யானைக்குக் கரும்பு தன்னையளித்தவா
கரும்புவில்லை எடுத்தவனை கண்காளால் எறித்தவா
அல்லல்படும்‌ அன்பர்வாழ்வில் ஆனந்தமே அருளவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய் சொக்கேசனே

நரிகளெல்லாம்‌ பரிகளாக நாடகம்‌ பரிந்தவா
நாரையதும்‌ முக்திகாண நலம்பரிந்த நாயகா
அரியும்‌௮றியாத்‌ திருவடியை அடியவர்க்கு காட்டவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

வந்திதந்த பிட்டுக்கே‌ வருந்திமண்ணை சுமந்தவா
வாதவூரர்‌ பாடல்கேட்டு முதுகில் புண்ணைக் கொண்டவா
எந்தநாளும் உன்னையென்னும் ஏழைக்கருள் செய்யவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

தமிழும் வாழ்வேண்டியே தலையில்விறகு சுமந்தவா
தலையில்கங்கை மதியும்சூடி. கயிலைமலை அமர்ந்தவா
அமிழதம்‌அந்த அமரர்கொள்ள ஆலகாலம்‌ உண்டவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்க்‌ சொக்கேசனே

அக்னியில்‌ இட்ட ஏடும்‌ அழிந்திடாமல்‌ காத்தவா
அலைகளாடும்‌ வைகையிலும்‌ அவற்றைக்கரை சேர்த்தவா
முக்திதரும் முதல்வனென மதுரநகர் அமர்ந்தவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

ஆயுதங்கள் ஏதுமின்றி புறங்கள்மூன்றும்‌ எறித்‌தவா
ஆணவமேகொண்ட பிரம்மன் தலையிலொன்று பரித்தவா
காயுமான மனங்களையும்‌ கனியுமென மாற்றவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்ச்‌ சொக்கேசனே

பார்தனோடு போட்டியிட்டு பன்றிவேட்டை அடினாய்
பாண்டியனின்‌ சொல்லைக்கேட்டுக்‌ காலகள்மாறி ஆடினாய்‌
ஆர்தெழுந்த அலைகள்போல அன்புகாட்ட ஓடிவா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாய்க சொக்கேசனே

வன்னிமரம்‌ கிணறுகூட வந்துசாட்சி கூறினாய்‌
வஞ்சியர்கள்‌ சாபம்தீர வளையல்தன்னைச்‌ துட்டினாய்‌
கன்னியர்கள் மாலை சூட கருணையோடு இங்கு வா
அங்கயற்கண்ணி போற்றும்‌ ஆலவாயக்‌ சொக்கேசனே

ஓம்‌ நமசிவாய ஓம்‌ ஓம்‌ நமசிவாய!

No comments:

Post a Comment

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...