Sunday, 30 September 2018
Saturday, 22 September 2018
பிரதோஷ அபிஷேக பலன்கள்
பால் - நீண்ட ஆயுள் .
தயிர்- நல்ல குழந்தைகள்
நெய்- முக்தி
கரும்பு சாறு- ஆரோக்கியம்
பஞ்சாமிர்தம்- செல்வம்
தேன்- இனிய குரல்
இளநீர்- சுகம்
அன்னம் (சமைக்கப்பட்ட அரிசி) - உயர்ந்த வாழ்க்கை
சந்தனம் - லட்சுமி கடாக்ஷம்
எலுமிச்சை சாவின் பயத்தை நீக்குகிறது
சர்க்கரை பகைமையை நீக்குகிறது
அரிசி மாவு கடனை தீர்க்கும்.
உங்கள் தேவைக்கிணங்க பிரதோஷ நேரத்தில் சிவனை அபிஷேகம் செய்யும் பொருட்களை வழங்கி இறைவனருள் பெறுங்கள். இன்னல்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
சனி மகா பிரதோசம்
சனி பகவானை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழ்வில் நிகழும் பல இன்னல்களுக்கு அவரது சக்தியே அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது கர்ம பலனை வழங்கும் நியாயாதிபதி அவர். ஒன்பது கிரகங்களில் ஒருவராவார். சனி பகவானின் பிடியில் வாழ்வில் எந்த தருணத்திலாவது மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும் .
ஏழரை நாட்டு சனியின் சுழற்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வருவது. இத்தகைய வேளைகளில் படும் அவஸ்தைகளில் இருந்து விடுபட சனி ஆராதனை செய்வது வழக்கம். சனிக் கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு மகிமை அதிகம். சிவனை சனிக்கிழமை அன்று வணங்கி, பிரதோஷ விரதம் இருந்து நம் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.
சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும்.
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும்
சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
Friday, 21 September 2018
அனைவருக்கும் வணக்கம்
புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் தற்பொழுது ஒரு கால பூசையும் பிரதோசம் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு பூசை வழிபாடு நடைபெறுகிறது .இதில் கலந்து கொண்டு இறைவனின் ஆசிபெற வேண்டுகிறோம்.
தொடர்ந்து 11 பிரதோசம் மற்றும் 12 தேய்பிறை அஷ்டமி கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் பிரார்த்தனை நிறைவேறும்.
ஓம் நமசிவாய !
Subscribe to:
Posts (Atom)
சங்காபிசேகம் 2021
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...
-
சொக்கநாதர் பதிகம் ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய! கல்லில்செய்த யானைக்குக் கரும்பு தன்னையளித்தவா கரும்புவில்லை எடுத்தவனை கண்காள...
-
இறையன்புடையீர் வணக்கம், ஒவ்வொரு ஆலயங்களுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் மற்றும் பரிகாரங்கள் உண்டு. அதுபோல நமது புங்கம்பாடி அருள்மிகு மீனாட்சி அ...








