Saturday 22 September 2018

சனி மகா பிரதோசம்






சனி பகவானை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழ்வில் நிகழும் பல இன்னல்களுக்கு அவரது சக்தியே அடிப்படை காரணமாக இருக்கிறது. நமது கர்ம பலனை வழங்கும் நியாயாதிபதி அவர்.  ஒன்பது கிரகங்களில் ஒருவராவார்.  சனி பகவானின் பிடியில் வாழ்வில் எந்த தருணத்திலாவது மாட்டிக் கொள்ளத்தான் வேண்டும் .

ஏழரை நாட்டு சனியின் சுழற்சி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் வருவது. இத்தகைய வேளைகளில் படும் அவஸ்தைகளில் இருந்து விடுபட சனி ஆராதனை செய்வது வழக்கம். சனிக் கிழமை அன்று பிரதோஷம் வந்தால் அதற்கு மகிமை அதிகம். சிவனை சனிக்கிழமை அன்று வணங்கி, பிரதோஷ விரதம் இருந்து நம் இன்னல்களில் இருந்து விடுபடலாம்.

சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும்.

சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.  அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும்

சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.

பஞ்சமா பாவங்களும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.



No comments:

Post a Comment

சங்காபிசேகம் 2021

 கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், புங்கம்பாடி கிராமம் அருள்மிகு மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் திருக்கோவிலில் (06.12.2021) கார்த்திகை 3...