அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் விளம்பி வருடம் சித்திரை 1 ஆம் நாள் (14.04.2018) காரியகாளியம்மன் கோவிலிருந்து ஊர்வலமாக 108 பால் குடம் பக்தர்களால் எடுத்துவரப்பட்டு மீனாட்சி சொக்கநாதருக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் தீபாராதனை மிக சிறப்பாக நடைபெற்றது, 1000 பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டு இறைவனின் ஆசி பெற்றனர். சென்னை சிவயோக திலகம் சிவசித்தர் வாக்கு சத்தியம்மா அவர்களின் தலைமையில் கைலாய வாத்தியத்தோடு திருவாசகம் ஓதுதல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி புங்கம்பாடி அரண்மனையார் திரு முத்து ராமையா வள்ளல் அவர்களின் முழு முயற்சியால் நடைபெற்றது .






















































No comments:
Post a Comment